Cameraeyes

Monday, August 25, 2008

RTP

ஏன்பா யாராவது நம்ம பேனர் பார்த்தேளா?? கடைசி கச்சேரி முடியும் போது யாரு எடுத்துந்துன்டு போனா?.. ..

oortist எல்லாம் வந்தாச்சா? யாரு sounds system check பண்ணுரா ?? ..

அங்க பாரு artist இப்பதான் தொண்டைய செருமுரார் அதுக்குள்ள இப்பவே இங்க ஒருத்தர் தலை ஆட்ட ஆரம்பிச்சுட்டார்..மங்களம் முடிச்சதுக்கு அப்புறம் கூட நிப்பாட்ட மாட்டார்..

எத்தன தடவை சொன்னேன் இந்தப் புடவை வாங்காதேன்னு ...உன் கலர் கம்மியா காட்டறதுன்னு...அங்க பாரு எல்லாரும் எப்படி ஜம்முன்னு வந்திருக்கான்னு..அந்த பச்சைக் கலர் புடவை சூப்பரா இருக்கு இல்ல், இந்த மெருன் கூட ரொம்ப நல்லா இருக்கு....அந்த பர்பிள் அடிச்சிக்கவே முடியாது அம்சமா இருக்கு..

போதும் போதும் புடவைய கிரிட்டிசைஸ் பண்றேன்னு எல்லாரையும் நைசா பார்த்து ரசிச்சது...புடவை தான் நீங்க சொன்னத வாங்கலையே தவிர உங்களுக்கு பிடிச்ச செருப்பு தான் போட்டுண்டு வந்திருக்கேன் உள்ளே போனதும் நல்ல இடமா பார்த்து உட்காரநும்..அப்பதான் யாருக்கும் கேட்காது..

என்னடி சொல்லுரே..எல்லாரும் கேட்கும் படி உட்காருவா..

நான் சொன்னது உங்க குறட்டையை..

என்னது உன் ஆத்துக்காரரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!

இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.

அட போடா ஒன்னும் தேற மாட்டேங்குது...போனவாரம் ஒரு குஜ்ஜூ கச்சேரி போயிருந்தேன்...புடவைய கட்டினா கூட மாராப்ப அந்தப் பக்கமா போட்டு என்ன ஸ்டைலு....இட்லி இட்லிதான் சப்பாத்தி சப்பாத்தி தான்..துக்டா துக்டாவா போட்டுக்கிட்டு பாட்டென்ன ஆட்டமென்ன பட்டயக் கிளப்பிருச்சில்ல..எல்லாரையும் கட்டிப்பிடிச்சி இல்ல வரவேற்கிறாங்க...இதமாதிரியா வாங்கோன்ணு கூப்பிறாங்க..

ஏண்டாப்பா அண்ணா வந்தாச்சா??

யாரு யாருக்கு அண்ணா ? ..membership எடுக்குறது இல்லை..ticket வாங்குறது இல்லை கேட்டா artist ஒன்னு விட்ட cousin ன்னு கதை விடறது..இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கச்சேரி attend பண்ணிட்டு organization க்கு மங்களம் பாடுரது..

டேய் குட்டி பையா .. நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற ?

இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...

ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா....

ம்ம்ம்..

சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....

சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....


...ம்க்கும்... உங்களுக்கா....பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்


ஒரு family ticket கொடுங்க..

சார்..பாட்டிக்கு தனியா ticket எடுங்கோ..seinor citizen category..

அது எப்படி..எங்க பாட்டி எங்க family இல்லைன்னு நீ எப்படி சொல்லலாம்??
அதுமட்டுல்லாம பாட்டியை இப்பவே டிக்கெட் வேற எடுக்கா சொல்லுறேள்..அப்படி என்ன வயாசாச்சு??

என்னடா குசேலன் அல்வா கொடுத்துட்டாரா??..

அபிஷ்டுகளா..குசேலன் அவல்ல கொடுப்பார்..

பாட்டி அது அந்த கால குசேலன்..

என்னலாம் CD வச்சு இருக்கேள்?? ..

நிறைய இருக்கு சார்..

ஆமாம் நிறைய collections இருக்கு..

பாட்டு என்னனு போடலியே..

Next time பண்ணுறோம்..எத்தனை CD வேணும் உங்களுக்கு..

அது ராகம் எல்லாம் எழுதினா இன்னும் நல்லா இருக்கும்..

பண்ணிரலாம் சார்...எத்தைனை CD வேணும்?

next time வாங்கலாம்..உள்ள யார் கூடவும் பேச முடியலை.அதுதான் உங்ககிட்ட பேசலாம்ன்னு வந்தேன்..

குழந்தை நல்ல பேசுராளே..ஏன் வெளியலே இருக்கேள்..உள்ள இருந்து ஜோரா கச்சேரி கேட்க வேண்டியதுதானே..

அதையேன் கேட்கறேள்..இப்படிதான் ஒரு தரம் கச்சேரியில் அஷ்டபதி பாடும் போது "சத்குரு ஸ்வாமிக்கு ஜே!" என்பதற்கு பதிலாக "சத்ரு மாமிக்கு ஜே" என்று சத்தமாக உளறிடுது..

என்னப்பா போன கச்சேரிக்கு வருவேன்னு எதிர்பார்த்தேன்.ஏன் வரலை..

வரணும்னுதான் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

இந்த பாருங்க ரவி சார்..நீங்க sponsor ஆ இருக்கலாம்..அதுக்காக இந்த concert full ஆ 'பை ரவி' songs துண்டு சீட்டு கொடுக்குறது நல்லா இல்லை....


அங்க யாருப்பா serious ஒருத்தர் நம்ம concerts பத்தி விசாரிச்சிகிட்டு இருக்கார்..
அது வேற ஒண்ணும் இலலை..அவாளாம் regular ஆ நம்ம concert க்கு வராவா..

அப்புறம் ஏன் உள்ளே போகம வெளியிலேயே நின்னூன்டு இருக்கா?

only flyers கொடுக்க மட்டும்தான் வருவா....infact நம்மளே sometimes அடுத்த concert எங்கேன்னு அவாகிட்டதான் கேட்டு தெரிஜுகனும்னா பார்த்துக்கோயேன்..

ஏம்பா எங்கெல்லாம் உங்களைத் தேடுரது..சீக்கிரம் போய் starbukcs Expresso Double Shot ஒன்னு வாங்கிட்டு வாங்கபா..

என்னது starbucks ஆ..இதுக்காக 35 வரைக்கும் போகனுமா?? இந்த சொம்புஅ வென்னீர் ஜலம் கொண்டு வந்து ..

அந்த காலம் எல்லாம் மாறியாச்சு..சீக்கிரம் RTP முடியரதுகுள்ள வாங்கின்டு வா..

நம்ப மல்லிகா புள்ளை DC ல இருக்கானாம் வரன் பார்த்திண்டு இருக்கா...ரொம்ப நல்ல பையன்..கை நிறைய சம்பளம்.DC ல அவாத்து கொல்லைக்கதவ திறந்தா புஷ்ஷோடு ஆம் தெரியும்ன்னா பார்த்துக்கோங்கோளேன்...நம்ப வசுந்த்ரா ஜாதகத்தை தாங்கோ நானாச்சு முடிச்சுவைக்கிறேன்.

துக்கடா songs ஆரம்பிச்சா? இப்போ நேர உள்ள போனா சில பேர் சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டின்டு இருப்பா..சில பேர் உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவா..இன்னும் சிலபேர் விழுந்து கும்புடுகிறேன் என்று கையை தூக்கி வச்சுப்பா.....தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.

யாரவது என் பொண்ணை பார்த்தேளா??

பொண்ணுதானே..உங்க ஆத்துக்காரை கூப்பிட்டு நேரா மென்ஸ் ரெஸ்ட் ரூம் போங்க சொல்லுங்கோ..நீங்க அங்க போக மாட்டேள்னு அவளுக்குத் தெரியும்..

hi guys ..hope you are all the commite memebers..i have a suggestion..

pleast tell us..how was the concert ?

its good..but it would be nice if you provide a separate mike for the venna artist..

veena artist..its a vocal concert..

may be ..but i saw a guy sitting behind the singer with veena without mike..

நீனு..hyderabad ஆ..

ஆமான்டி...next time லு கண்டசாலா songs பாட செப்பன்டி..

அப்பாட ..அடுத்த கச்சேரி எப்போ ??

ஏன்பா யாராவது நம்ம பேனர் பார்த்தேளா?? கடைசி கச்சேரி முடியும் போது யாரு எடுத்துந்துன்டு போனா?..

Saturday, September 04, 2004

Hello World...!

This is Maya From texas...